2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 01

Janu   / 2024 பெப்ரவரி 01 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.

1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.

1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.

1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.

1924:  சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.

1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.

1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.

1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.

1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.

1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.

2003: கொலம்பியா விண்ணோடம், பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

2004: சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251பேர் கொல்லப்பட்டனர்.

2005: நேபாள மன்னர் ஞானேந்திரா, நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

2005: கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.

2007: மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

2009: ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமராக ஜோனா சிகுரோடோட்டிர் தெரிவானார். நவீன உலகில் ஓரின சேர்க்கையாளராக அறியப்பட்ட ஒருவர்  அரசாங்கமொன்றின் தலைவராக தெரிவாகியமை அதுவே முதல் தடவையாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X