Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 28 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
1520: போர்த்துக்கேய கடலோடி பேர்டினான்ட் மகலன் தலைமையில் 3 கப்பல்கள் முதல் தடவையாக அத்திலாந்திக்கிலிருந்து பசுபிக் சமுத்திரத்தை அடைந்தன.
1729: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் செவ்விந்தியர்களால் 138 பிரெஞ்சு ஆண்கள் 35 பெண்கள் 56 சிறார்கள் கொலை செய்யப்பட்டனர்.
1821: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து கொலம்பியாவுடன் பனாமா இணைந்து கொண்டது.
1843: ஹவாய் இராஜ்ஜியத்தை பிரிட்டனும் பிரான்ஸும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.
1893: நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் முதல் தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1942: அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் கொகனட் குரொவ் எனும் இரவு விடுதியில் ஏற்பட்ட தீயினால் 491 பேர் பலியாகினர்.
1943: இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கூடி யுத்த தந்திரோபாயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
1975: போர்த்துக்கலிடமிருந்து பிரிவதாக கிழக்கு திமோர் சுதந்திர பிரகடனம் செய்தது.
1979: நியூஸிலாந்து விமானமொன்று அந்தார்ட்டிக்காவில் விபத்துக்குள்ளானதால் 257 பேர் பலி.
1987: தென்னாபிரிக்க விமானமொன்று இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததால் 159 பேர் பலி.
1991: ஜோர்ஜியாவிலிருந்து தெற்கு ஒசெஸியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago