Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2020 நவம்பர் 24 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.
1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.
1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
1865 – இலங்கையில் கொழும்பு, கண்டி மாநகரசபைகள் அமைக்கப்பட்டன.
1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடியை சுட்டுக் கொன்ற லீ ஆர்வி ஆசுவால்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
1965 – யோசப் மொபுட்டு கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
1966 – செக்கோசிலோவாக்கியாவில் பிராத்திஸ்லாவா நகரில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் உயிரிழந்தனர்.
1976 – துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் தில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006 – சிங்கள நாளிதழான ஹமௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
2016 – கொலம்பியா அரசும் கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
2017 – பிர் அல்-அபெட் தாக்குதல்: எகிப்தில் பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளிவாசலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago