Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 16 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.
1491 – எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர்.
1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன.
1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1797 – புருசியாவின் மன்னராக மூன்றாம் பிரெடெரிக் வில்லியம்சு முடி சூடினார்.
1846 – இலங்கையில் கைம்பெண்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு, கடுந்தொழில் செய்யக் கட்டளையிடப்பட்டார்.
1852 – ஆங்கிலேய வானியலாளர் யோன் ரசல் இந்த் என்பவர் 22 கலியோப் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1885 – 'மானிட்டோபாவின் தந்தை' என அழைக்கப்பட்ட கனடாவின் மேட்டிசுப் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தேசத்துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
1904 – ஆங்கிலேயப் பொறியியலாளர் ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 – ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
1920 – ஆத்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாசு ஆரம்பிக்கப்பட்டது.
1933 – ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1938 – எல்எசுடி முதல் தடவையாக ஆல்பர்ட் ஹாப்மன் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படை ஆம்பர்கு மீது குண்டுகளை வீசியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் குயின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1945 – பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 – மூன்று விண்ணோடிகளுடன் 84 நாள் பயணமாக ஸ்கைலேப் 4 விண்கலத்தை நாசா ஏவியது.
1974 – ஆரசீபோ தகவல் 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன்களுக்கு புவேர்ட்டோ ரிக்கோவில் அரசீபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 – மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எல் சல்வடோர் இராணுவத்தினர் இயேசு சபையைச் சேர்ந்த ஆறு மதகுருக்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர்.
2002 – சார்சு நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.
2020- இலங்கையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் தடவையாக 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இதற்கு முன்னர், கடந்த 2007 ஆம் ஆண்டில் இவ்வாறான சாதனை ஒன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
• உலக சகிப்புத் தன்மை நாள் இன்றாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
3 hours ago