2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 14

Janu   / 2024 நவம்பர் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1918 : செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.

1922 : பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

1940 : இரண்டாம் உலகப் போர் - இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.

1941 : இரண்டாம் உலகப் போர் - வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.

1941 : இரண்டாம் உலகப் போர் - பெலருசில் ஜேர்மனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.

1963 : ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.

1965 : வியட்நாம் போர் - லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.

1967 : அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1969 : அப்பல்லோ திட்டம் - நாசாவின் அப்பல்லோ 12 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.

1970 : சோவியத் ஒன்றியம் பன்னாட்டு குடிசார் வான் பயண அமைப்பில் இணைந்தது.

1970 : மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், மார்சல் பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியினர் உட்பட 75 பேர் உயிரிழந்தனர்.

1971 : மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

1975 : மேற்கு சகாராவை விட்டு எசஸ்பானியா விலகியது.

1978 : பிரான்ஸ் ஆப்ரோடைட்டு என்ற அணுவாயுத சோதனையை நிகழ்த்தியது.

1982 : போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா 11 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1990 : கிழக்கு ஜேர்மனி மற்றும் மேற்கு ஜேர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

1991 : நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.

1996 : டொக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2001 : ஆப்கானித்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் வடக்குக் கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

2003 : 90377 செட்னா என்ற திரான்ஸ் -   நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

2016 : நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X