Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூலை 29 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : இத்தாலியில், முதலாம் உம்பெர்த்தோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
1907 : சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற்படியாக இருந்தது.
1921 : ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிஷ தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948 : ஒலிம்பிக் விளையாட்டுகள் - 14ஆவது ஒலிம்பிக் விளையாட்டுகள் - இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.
1950 : கொரியப் போர் - நான்கு நாள்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர்.
1957 : பன்னாட்டு அணுசக்தி முகாமையகம் அமைக்கப்படட்து.
1958 : ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1959 : அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1967 : வியட்நாம் போர் - வட வியட்நாம் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கப்பலில் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.
1967 : வெனிஸ்வேலாவின் 400ஆம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.
1973 : கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.
1980 : ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.
1981 : இலண்டன் புனித பவுல் பேராலயத்தில் நடைபெற்ற வேல்ஸ் இளவரசர் சார்லஸ்-டயானா திருமணத்தை உலகத் தொலைக்காட்சிகளில் 700 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.
1987 : ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ் அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர்.
1987 : இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை -இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை இராணுவத்தினர் ஒருவரால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு காயம் அடைந்தார்.
1999 : இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 : ஏரிஸ் குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2010 : காங்கோவில் கசாய் ஆற்றில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
2013 : சுவிட்சர்லாந்தில் லோசான் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.
2015 : மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயக்குதளத்தை வெளியிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago