Ilango Bharathy / 2021 ஜூலை 11 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1919 : நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.
1921 : செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றிஇ மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.
1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் உக்ரைனியத் தீவிரவாத இராணுவத்தினரால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் - நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: ஜேர்மனிய, இத்தாலியப் படையினர் நேச நாட்டுப் படைகள் மீது சிசிலியில் தாக்குதலைத் தொடுத்தனர்.
1950 : பாக்கிஸ்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது.
1960 : தகோமி (பின்னர் பெனின்), மேல் வோல்ட்டா (பின்னர் புர்க்கினா), நைஜர் ஆகிய நாடுகளுக்கான விடுதலைக்கு ஆதரவாக பிரான்சு வாக்களித்தது.
1962 : முதலாவது அத்திலாந்திக்கிடையேயான செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.
1971 : சிலியில் செப்புச் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டன.
1973 : பிரேஸில் விமானம் பாரிஸில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
1978 : எஸ்பானியாவில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.
1979 : அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.
1982 : இத்தாலி மேற்கு ஜேர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1983 : எக்குவாடோரில் போயிங் 737 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 119 பேரும் உயிரிழந்தனர்.ஜ1ஸ
1990 : கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
1991 : ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியாஇ ஜித்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர்.
1995 : வியட்நாமுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.
1995 : செர்பிய இராணுவம் பொசுனிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். படுகொலைகள் ஜூலை 22 வரை தொடர்ந்தது.
2006 : மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்.
2007 : குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.
2010 : உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
12 minute ago
1 hours ago
4 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
4 hours ago
14 Dec 2025