Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 ஜூலை 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1807: பிரான்சு, புருசியா, உருசியா ஆகியவற்றிடையெ அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.
1834: நியூயோர்க்கில் அடிமைத்தனத்துக்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமாகின.
1846: அமெரிக்கப் படைகள் மான்டரே, யெர்பா புவெனா ஆகியவற்றைக் கைப்பற்றினர். கலிபோர்னியாவைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் ஆரம்பமானது.
1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பாக நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
1896: இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1898: அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி அவாயை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
1915: 157 பயணிகளுடன் சென்ற டுரொலி ஒன்ராறியோ குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15பேர் கொல்லப்பட்டனர்.
1915: இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பேதிரிசு என்ற இராணுவத்தினர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
1928: துண்டுகளாக்கப்பட்ட வெதுப்பிகள் முதல்தடவையாக மிசூரியில் விற்பனைக்கு வந்தன.
1937: சீனாவின் பெய்ஜிங் நகரம் மீது ஜப்பானிய துருப்புகள் படையெடுத்தன.
1941: ஐஸ்லாந்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின.
1941: இரண்டாம் உலகப் போர் - பெய்ரூத் பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.
1953: சே குவேரா பொலிவியா, பெரு, எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.
1959: வெள்ளிக் கோள், ரேகுளுஸ் விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
1965: கனடாவில் ஆங்கிலத்தக்கு சமமாக பிரெஞ்சு மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது.
1978: பிரிட்டனிடமிருந்து சொலமன் தீவுகள் சுதந்திரம் பெற்றது.
1980: ஈரானில் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறக்கு வந்தது.
1983: பனிப்போர் - சோவியத் தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் மாஸ்கோ சென்றார்.
1985: விம்பிடள்டன் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் வீரர் பொரிஸ் பெக்கர் 17 ஆவது வயதில் சம்பியனாகி புதிய சாதனை படைத்தார்.
1991: சுலோவீனியாவில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1997: ஈராக்கிய - குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட துருக்கியப் படைகள் வடக்கு ஈராக்கில் இருந்து வெளியேறின.
2005: லண்டனில் பஸ், மற்றும் ரயில்களில் வெடித்த குண்டுகளால் 52 பேர் பலி. சுமார் 700 பேர் காயம்.
2007: புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ்மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2012: ரஷ்யாவின் கிராசுனதாரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 172பேர் உயிரிழ்ந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago