Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 18 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி வெளிநாட்டுத் தூதுவர், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என, ஆணை பிறப்பித்தார்.
1908 : ஜப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோஸ் கரையை அடைந்ததுடன் ஜப்பானி குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
1908 : பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1928 : வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1946 : சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
1948 : கொலொம்பியா ரெக்கார்ட் நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
1948 : மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1953 : 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1953 : ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி - 24 விமானம் ஜப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1954 : அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
1965 – வியட்நாம் போர் - அமெரிக்கா பி - 52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.
1972 : பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
1981 : அமெரிக்காவில் மசாஸ்செட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1981 : கரவு தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான முதலாவது வானூர்தி லொக்கீட் எப் - 117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1983 : சாலஞ்சர் விண்ணோடம் - சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
1983 : பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக ,10 பகாய் பெண்கள் ஈரான் சீராஸ் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
1985 : விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1994 : வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.
2006 : கசகஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
36 minute ago