Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 31 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
1606 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்துக்கு எதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக, கை பாக்சு என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் இலண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
1803 –கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கு எதிரான போரை பிரித்தானியர் ஆரம்பித்தனர்.
1862 – ஆல்வன் கிரகாம் கிளார்க் சிரியசு பி என்ற வெண் குறுமீன் விண்மீனை 18.5 செமீ தொலைநோக்கி ஊடாகக் கண்டுபிடித்தார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க சட்டமன்றம் அடிமை முறையை ஒழிக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.
1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு, ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
1915 – முதலாம் உலகப் போர்; செருமனி உருசியாவுக்கு எதிராக முதற்தடவையாக நச்சு வாயுவை பொலிமோவ் சமரில் பயன்படுத்தியது.
1918 – இரண்டு பிரித்தானிய அரச கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து போர்க்கப்பல்கள் சேதமடைந்தன.
1928 – லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.
1937 – சோவியத் ஒன்றியத்தில் த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் 31 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மலேயா சமரில் கூட்டுப் படையினர் ஜப்பானியரிடம் தோற்றதை அடுத்து சிங்கப்பூருக்குப் பின்வாங்கினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்சல் தீவுகளில் தரையிறங்கின.
1945 – அமெரிக்க இராணுவ வீரன் எடி சிலோவிக் என்பவன் இராணுவத்தில் இருந்து வெளியேறியமைக்காகத் தூக்கிலிடப்பட்டான்.
1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் இசுடூதொஃப் வதை முகாமிலிருந்த 3,000 கைதிகள் நாட்சிகளினால் பால்ட்டிக் கடலினூடாக கட்டாயமாக நடத்திக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946 – பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன.
1950 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் ஐதரசன் குண்டு தயாரிப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.
1953 – வடகடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 300 பேரும் உயிரிழந்தனர்.
1957 – லாஸ் ஏஞ்சலசில் இரண்டு வானூர்திகள் மோதியதில் 8 பேர் வானிலும், இருவர் தரையிலும் உயிரிழந்தனர்.
1958 – விண்வெளிப் போட்டி: அமெரிக்காவின் முதலாவது வெற்றிகரமான செயற்கைக் கோள் எக்ஸ்புளோரர் 1 வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டையைக் கண்டறிந்தது.
1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1966 – சோவியத் ஒன்றியம் தனது லூனா திட்டத்தின் கீழ் லூனா 9 என்ற விண்கலத்தை ஏவியது.
1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் ஓசிமின் நகரில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.
1968 – நவூரு ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ 14: விண்வெளி வீரர்கள் அலன் ஷெப்பர்ட், இசுடுவர்ட் ரூசா, எட்கார் மிட்செல், ஆகியோர் சாடர்ன் ஏ ஏவுகலத்தில் நிலாவை நோக்கி சென்றனர்.
1980 – குவாத்தமாலாவில் எசுப்பானிய தூதரக முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட்சு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996 –இலங்கை மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
2000 – கலிபோர்னியாவில் எம்டி-83 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயனம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.
2003 – அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
2009 – கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2018 – நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
1 hours ago