2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 24

Mithuna   / 2024 ஜனவரி 24 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

41: கலிகுலா என அறியப்பட்ட ரோம மன்னன் கையுஸ் சீசஸ் படுகொலை செய்யப்பட்டான்.

1857: தெற்காசியாவின் முதலாவது பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1862: ருமேனியாவின் தலைநகராக புகாரெஸ்ட் தெரிவுசெய்யப்பட்டது.

1918: ரஷ்யாவில் கிறகரியன் கலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1924: ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க் என முன்னர்அறியப்பட்ட பெட்ரோகார்ட் நகரின் பெயர் லெனின்கிராட் என மாற்றப்பட்டது.

1939: சிலியில் இடம்பெற்ற பூகம்பத்தில் சுமார் 5000 பேர் பலியாகினர்.

1966: பிரான்ஸ், இத்தாலி எல்லையில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் 117 பேர் பலி.

1972: இரண்டாம் யுத்தத்தின் முடிவிலிருந்து குவாம் காட்டில் மறைந்திருந்த ஜப்பானிய படைவீரர் சோய்ச்சி யோகோஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.

1986: வொயேஜர் 2 விண்கலம்  யுரானஸ் கிரகத்தை 81500 கிலோமீற்றர் தொலைவில் கடந்து சென்றது.

1993: துருக்கிய பத்திரிகையாளர் உகுர் முக்கு, கார் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

1996: ரஷ்யாவுக்காக உளவுபார்த்தாக குற்றம் சுமத்தப்பட்ட போலந்து பிரதமர் ஜோசப் ஒலெக்ஸி இராஜினாமாச் செய்தார்.

2003: அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் செயற்பட ஆரம்பித்தது.

2006: இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007: சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

2009: இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல்போனார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X