Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 ஜனவரி 20 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1793: பிரான்ஸ், ஸ்பெய்னுடன் அமெரிக்கா சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்க சுதந்திரப் போராட்ட மோதல்கள் முடிவுக்கு வந்தன.
1801: யாங்கேய் யுத்தத்தில் பெரு, பொலிவியா கூட்டணியை சிலி தோற்கடித்தது.
1841: ஹொங்கொங்கை பிரிட்டன் கைப்பற்றியது.
1885: ரோலர் கோஸ்டருக்கு எல்.ஏ. தொம்ஸன் காப்புரிமை பெற்றார்.
1929: முதல் தடவையாக திறந்தவெளியில் படம்பிடிக்கப்பட்ட முழுநீள திரைப்படமான ' ன் ஓல்ட் அரிஸோனா' திரையிடப்பட்டது.
1934: பியூஜிபில்ம் நிறுவனம் டோக்கியோவில் ஸ்தாபிக்கப்பட்டது.
1936: 8 ஆம் எட்வேர்ட் பிரிட்டனின் மன்னரானார்.
1936: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்புக்கான திகதி மார்ச் 4 ஆம் திகதியிலிருந்து ஜனவரி 20 இற்கு மாறியமை இதுவே முதல் தடவை.
1941: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 3 ஆவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியானார்.
1945: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து சாதனை படைத்தார்.
1961: ஜோன் எவ். கென்னடி அமெரிக்க ஜனாதிபதியானார்.
1969: கிழக்கு பாகிஸ்தானில் மாணவரான அமானுல்லா அஸாதுஸ்ஸமான் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்திற்கு வழி வகுத்தது.
1981: அமெரிக்க ஜனாதிபதியாக 69 வயதான ரொனால்ட் ரீகன் பதவியேற்றார். அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவர் இவர்.
1991: சூடான் அரசாங்கம் நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தியது. வடக்கிலுள்ள முஸ்லிம்களுக்கும் தெற்கிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான சிவில் யுத்தத்தை தீவிரமாக்கியது.
1992: பிரான்ஸில் விமான விபத்தொன்றில் 87 பேர் பலி.
2001: பிலிப்பைன்ஸில் 4 நாள் வன்முறையற்ற புரட்சி மூலம் ஜனாதிபதி ஜோசப் எஸ்ராடா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
2009: அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றார். இப்பதவியைப் பெற்ற முதலாவது கறுப்பினத்தவர் இவராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago