Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர்.
1757 – பிரான்சின் 15ஆம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: வர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பெனடிக்ட் ஆர்னோல்டு தலைமையிலான பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
1840 – இலங்கையில் மீன் வரி அறவிடுவது நிறுத்தப்பட்டது.
1846 – ஒரிகன் பிராந்தியத்தை ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்காவின் கீழவை எதிர்த்து வாக்களித்தது.
1854 – சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
1882 – அமெரிக்க அரசுத்தலைவர் யேம்சு கார்பீல்டைக் கொலை செய்த குற்றத்திற்காக சார்லசு கிட்டோ என்பவனுக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
1900 – அயர்லாந்துத் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
1918 – செருமன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது.
1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
1945 – போலந்தின் புதிய சோவியத்-சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
1950 – சோவியத் ஒன்றியத்தில் சிவெர்திலோவ்சுக் நகரில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த சோவியத் வான் படையின் தேசிய பனி வளைதடியாட்டக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உட்பட அனைத்து 19 பேரும் உயிரிழந்தனர்.
1967 – இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1970 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 ஆற நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.
1971 – உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1974 – பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் உயிரிழந்தனர்.
1975 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் தாசுமான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
1991 – சியார்சியப் படைகள் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் தரையிறங்கின. 1991–92 ளுதெற்கு ஒசேத்தியப் போர் ஆரம்பமானது.
1997 – உருசியப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
2000 – ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 – சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – ஈழப்போர்: கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
2014 – இந்திய கடுங்குளிர் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-14 தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
43 minute ago
58 minute ago