Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 28 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1066: பிரான்ஸில் பிறந்த முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுக்க ஆரம்பித்தார். பின்னர் பின்னர் இவர் 1087 வரை இங்கிலாந்தை ஆட்சி செய்தார்.
1867: கனடாவின் டொரண்டோ நகரம், ஒன்டாரோறியோ மாநிலத் தலைநகராகமாகியது.
1892: அமெரிக்காவில் முதலாவது இரவு நேர கால்பந்தாட்டப் போட்டி மின்னொளியில் நடைபெற்றது. மேன்ஸ்பீல்ட் ஸ்டேட் நோர்மல் பாடசாலை மற்றும் வியோமிங் செமினரி ஆகிய அணிகள் இதில் பங்குபற்றின.
1915: மெசெபத்தேமியாவில் துருக்கியை பிரிட்டன் தோற்கடித்தது.
1924: அமெரிக்காவின் இரு இராணுவ விமானங்கள் முதல் தடவையாக உலகைச் சுற்றிப் பறக்கும் திட்டத்தை பூர்த்தி செய்தன. இப்பயணம் 175 நாட்கள் நீடித்தது.
1939: போலந்தை பிரிப்பது தொடர்பாக ஜேர்மனிக்கும் சோவியத் யூனியக்கும் இடையில் ஒப்பந்தம்.
1978: பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டு 33 நாட்களே கடந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பாப்பரசராக விளங்கியவர் இவர்.
1987: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பலஸ்தீனர்களின் முதலாவது 'இன்டிபாதா' எழுச்சிப் போராட்டம் ஆரம்பம்.
1991: அணுவாயுதங்களைக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் திட்டத்திற்கிணங்க சோவியத் யூனியனும் தனது அணுவாயுதங்களைக்குறைக்கும் என சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் அறிவித்தார்.
1992: நேபாளத்தில் பாகிஸ்தான் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 167 பேர் பலி
.
1994: பால்டிக் கடலில் எஸ்டோனிய படகொன்று கவிழ்ந்ததால் 900 பேர் பலி.
1995: காஸா பகுதியில் பலஸ்தீன சுயாட்சி தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ரபின், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1999: கினியாவில் இராணுவத்தினருடனான மோதலில் 157 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago