2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 27

Janu   / 2024 செப்டெம்பர் 27 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான்.

1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.

1590 – ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.

1777 – பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.

1821 – மெக்சிகோ, எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.

1854 – “எஸ்.எஸ். ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.

1959 – ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரை உயிரிழந்தனர்.

1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .