2025 ஜனவரி 15, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 14

Janu   / 2024 செப்டெம்பர் 14 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

81: டைட்டசு என்ற தனது சகோதரன் இறந்ததை அடுத்து டொமீசியன், உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.

1752: கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி, புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

1812: நெப்போலியப் போர்கள் - நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

1829: உதுமானியப் பேரரசு, உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

1846: யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.

1847: மெக்சிக்கோ நகரத்தை "வின்ஃபீல்ட் ஸ்கொட்" தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.

1886: தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.

1901: அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார்.

1917: உருசியா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.

1944: இரண்டாம் உலகப் போர் - மாஸ்ட்ரிக்ட் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்ட முதலாவது டச்சு நகரம் ஆனது.

1954: சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959: சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960: எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

1962: கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.

1979: ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப் படி ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

1982: லெபனான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல், படுகொலை செய்யப்பட்டார்.

1984: ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

1999: கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகிய நாடுகல், ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தன.

2000: எம்.எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2000: விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2003: சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2003: ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2005: நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

2008: உருசியாவின் ஏரோபுளொட் விமானம், பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அனைத்துப் 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X