Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 04 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1912 : உதுமானியப் பேரரசு அல்பேனியக் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியதை அடுத்து கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1919 : துருக்கிக் குடியரசை அமைத்த முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியா, திரேசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாநாடு கூட்டினார்.
1923 : அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது.
1939 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனி மீது பிரித்தானிய வான்படையின் முதல் தாக்குதல் இடம்பெற்றது.
1941 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கிரீர் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.
1944 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.
1944: இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
1948 : நெதர்லாந்தின் அரசி விலெல்மினா சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து விலகினார்.
1951 : கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
1963 : சுவிட்சர்லாந்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் உயிரிழந்தனர்.
1970: சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவரானார்.
1971 : அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர்.
1972 : மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
1978 : அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1975 : அரபு-இஸ்ரேல் முரண்பாடு குறித்த சினாய் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டது.
1985 : கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.
1989 : கிழக்கு ஜேர்மனியின் லைப்சிக் நகரில் மக்களாட்சி சீர்திருத்தத்துக்கு ஆதரவான முதலாவது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1996 : போதைப்பொருளுக்கு எதிரான போர் - கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை கொலம்பிய இராணுவத் தளம் மீது தாக்குதலை நடத்தியது. மூன்று வார கரந்தடிப் போரில் குறைந்தது 130 கொலம்பியர்கல் கொல்லப்பட்டனர்.
1998 : இஸ்ட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
2006 : இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007 : சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
2010 : நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
51 minute ago
56 minute ago