2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 28

Janu   / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1913 : நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.

1914 : முதலாம் உலகப் போர் - அரச கடற்படை ஜேர்மானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.

1914 : முதலாம் உலகப் போர் - ஜேர்மானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.

1916 : முதலாம் உலகப் போர் - ஜேர்மனி ருமேனியா மீதும், இத்தாலி ஜேர்மனி மீது போரை ஆரம்பித்தன.

1924 : சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1943 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் – மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.

1963 : மார்ட்டின் லூதர் கிங்இ என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.

1964 : ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.

1968 : சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.

1988 : ​ஜேர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில், 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.

1990 : குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.

1990 : சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.

1993 : கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.

1996 : வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.

1998 : பாக்கிஸ்தானின் நாடாளுமன்றம் 'திருக்குர்ஆன், நபிவழி' ஆகியவை 'அதியுயர் சட்டம்' என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.

1998 : இரண்டாவது காங்கோ போர் - காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.

2006 : திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2006 : இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

2011 : ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டோரைத் தூக்கிலிடக்கூடாது எனக் கோரி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது பெண் போராளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .