Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 17 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1604 - ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர் வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.
1610 - பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1660 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1806 - எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1907 - மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1917 - முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
1941 - இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1961 - பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965 - 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966 - நியூயோர்க்கில் கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1979 - அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1995 - யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
1998 - நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1,200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2006 - ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.
2006 - ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago