2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்டோபர் 11

Janu   / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1138: சிலியின் அலேப்போ பிரதேசத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

1737: பூமியதிர்வில் 3 லட்சம் மக்கள் கொல்கத்தாவில் கொல்லப்பட்டதுடன் கொல்கொத்தாவின் அரைப்பகுதி பாதிப்புக்கும் உள்ளாகியது.

1852: அவுஸ்திரேலியாவின் மிகப்பழைய பல்கலைக்கழகமான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1868: தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது கண்டுபிடிப்பான இலத்திரனியல் குரல் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்றார்.

1910: அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ரைட் சகோதரர்கள் உருவாக்கிய விமானத்தில் பறந்ததன் மூலம் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதியானார்.

1939: அணுகுண்டுக்கான சாத்தியம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பிராங்களின் டி ரூஸ்வெல்டுக்கு விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிவித்தார்.

1954: முதலாவது இந்தோசைனா யுத்ததத்தில் வியட்மின் படைகள் வட வியட்நாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

1958: நாசாவின் முதலாவது சந்திர ஆய்வுக்கலமான பயனீர் -1 ஏவப்பட்டது.(இக்கலம் பூமிக்குத் திரும்பி எரியுண்டது)

1960: கிழக்கு பாகிஸ்தானில் வீசிய சூறாவளியில் 6000 பேர் பலி.

1968: அப்பலோ பயணத் தொடரில் மனிதர்களைக் கொண்ட முதலாவது விண்கலம் (அப்பலோ -7) ஏவப்பட்டது.

1882: 545ஆம் ஆண்டு பிரான்ஸுடனான யுத்தத்தின்போது மூழ்கிய இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னனின் கொடிக்கப்பல் 447 ஆண்டுகளின்பின் கடலடியிலிருந்து மீட்கப்பட்டது.

1987: தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக இந்திய அமைதிப்படைகள் ஒபரேஷன் பூமாலை நடவடிக்கையை ஆரம்பித்தன.

1986: பனிப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் ஏவுகணை குறைப்பு நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக ஐஸ்லாந்தில் சந்தித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .