Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1903: கனடாவில் பாரிய மண்சரிவினால் 70 பேர் பலி.
1945: இரண்டாம் உலகயுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி ஆகியன நேச நாடுகளிடம் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தன.
1945: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தனது நீண்டகால காதலியான ஈவா புரோனை பதுங்குக் குழியொன்றில் வைத்து திருமணம் செய்தார்.
1946: ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஹிடேகி டோஜோ மற்றும் 28 முன்னாள் ஜப்பானிய தலைவர்கள் போர்க்குற்றச்சாட்டு விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
1953: அமெரிக்காவில் முதல் தடவையாக பரீட்சார்த்த முப்பரிமா தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்பட்டது.
1970: வியட்கொங் கெரில்லாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக அமெரிக்க, தென் வியட்னாம் படைகள் கம்போடியாவுக்குள் படையெடுத்தன.
1986: லொஸ் ஏஞ்சல்ஸ் பொதுநூல் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 400,000 நூல்கள் எரிந்தன.
1991: பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய சூறாவளியினால் 138,000 பேர் பலி. ஒரு கோடி பேர் வீடுகளை இழந்தனர்.
1992: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கறுப்பின கார் சாரதியொருவரை தாக்கிய பொலிஸார் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இடம்பெற்ற பாரிய வன்முறைகளில் 53 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
1997: 1993 ஆம் ஆண்டின் இரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
2004: செப்டெம்பர்11 தாக்குதல் தொடர்பான விசாரணைக்குழுவிம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், உப ஜனாதிபதி டிக் செனி ஆகியோர் சாட்சியமளித்தனர்.
2005: லெபனானில் 29 வருடங்களாக நிலைக்கொண்டிருந்த சிரிய படையினர் வாபஸ் பெற்றனர்.
2011: இளவரசர் வில்லியம்ஸ், கேத்தரின் ஆகியோரின் திருமணம் இலண்டன் வெசுட்மினிஸ்டர்] மடத்தில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago