Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 நவம்பர் 16 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1532: தென் அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹுவல்பா ஸ்பானிய தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.
1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின.
1945: ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது.
1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1965: சோவியன் யூனியனின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. மற்றொரு கிரகத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் அதுவாகும்.
1988: பாகிஸ்தானில் பலவருடங்களின் பின்னர் நடைபெற்ற சுயாதீன தேர்தல் மூலம் பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ முதல் தடவையாக தெரிவானார்.
1997: சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்ட வெய் ஜிங்ஷேங்க் 18 வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் மருத்துவ காரணங்களால் விடுவிக்கப்பட்டார்.
2000: பில் கிளின்டன், வியட்னாம் யுத்தத்தின் பின்னர் வியட்னாமிற்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago