Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Janu / 2025 ஜனவரி 10 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1645 – முதலாம் சார்ல்ஸ் மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
1840 – ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
1881 – யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1916 – முதலாம் உலகப் போர்: எர்சுரும் சமரில் உருசியா உதுமானியரைத் தோற்கடித்தது.
1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1920 – வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
1924 – பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்.
1946 – லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
1946 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
1954 – பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
1962 – பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை உயிரிழந்தனர்.
1966 – இந்திய-பாக்கிஸ்;தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1972 – சேக் முஜிபுர் ரகுமான் பாக்கிஸ்;தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.
1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
1985 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.
1989 – கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
1995 – உலக இளையோர் நாள் பிலிப்பீன்சில் இடம்பெற்றது.
2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
2005 – தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
2007 – கினியில் அரசுத்தலைவர் லன்சானா கொண்டேக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
2013 – பாக்கிஸ்தானில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
2015 – மொசாம்பிக்கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் பித்தநீர் கலக்கப்பட்ட பியரை அருத்தியதால் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago