Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2016 நவம்பர் 22 , மு.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீருனு செத்துபோன ஒருவருடை பொடியை பொறுப்பேற்க, மூன்று பெண்கள் நீதிமன்றுக்கு வந்திருந்தாங்க... அதுவும் ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டு குழந்தைகள், ஆறு குழந்தைகளுடனேயே வந்திருந்தாங்க... எனினும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவருடைய பொடியை, மனைவிமார்களிடம் கையளிக்காத நீதிமன்றம், பொடியை அம்மாவிடமே கையளித்த சம்பவமொன்று கம்பஹாவில் அண்மையில் இடம்பெற்றது தெரியுந்தானே!
ஆக, அந்த கல்யாண இராமன், வேலிபாய்ந்து மாட்டிக்கிட்டாரு, இல்லாடிங்க... மூன்று பெண்களையும் ஏமாற்றியிருக்காரு, எப்படியோ...குழந்தைகள் அறுவரும், மூன்று தாய்மார்களின் எதிர்காலம்தான் கேள்விகுறியாகிட்டுங்கோ. இந்த வேலிபாய்தல் விவகாரம், நாடாளுமன்றத்திலும் சூடுபிடித்ததுங்கோ.
அவருனா தயாராகுவதற்கு இரண்டு, மூன்று மணிநேரம் எடுக்கும். எனக்கு அப்படியில்லைங்க, அவசரமாக இருந்தது, நான் வேலிபாய்;ந்துவிட்டேன் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், சபையில் சிரிபொலி எழுந்தது.
பிரதமருக்கு கீழுள்ள விடயதானங்கள் குறித்துதானுங்கோ நேற்று விவாதிக்கப்பட்டதுங்கோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமையன்று முழுநேரம் இருந்தது போலவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பகல்போசனம் வரையிலும் அவையிலேயே இருந்து, வாதப்பிரதிவாதங்களுக்கு பதிலளித்துவிட்டு சென்றாருங்கோ.
ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல உரையாற்றும் போதுதான் ‘வேலிபாய்தல்’ விவகாரம் சூடுபிடித்திருந்தது. ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளுந்தரப்பில் சிலர், உங்களுக்கு கால் உடைந்ததல்லோ, அதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலட்சக்கணக்கில் காசு கொடுத்ததல்லோ, வேலிபாய்ந்தா? கால் உடைந்தது என்று வினவினர்.
இதேகேள்வியை, இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் கேட்டுவிட்டார். சற்று சூடேறியிருந்த கெஹலிய எம்.பி, ஆண் விபசாரியாக இருப்பதை விடவும் வேலிபாய்தல் நல்லதென்று நான் நினைக்கிறேன் என்று சட்டென்று கூறிவிட்டாரு. அவையே கப்சுப்பென்று அமைதியடைந்துவிட்டது.
எனினும், திடீருனு அவைக்குள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பி, நானும் இவரும் (கெஹலிய) ஒரே மாவட்டங்கோ, அவருக்கு ஏன் கால்முறிந்தது, அவ்வளவு அவசரமாகவா வேலிபாய்ந்தார் என்று கேட்டக்கொண்டே போனார்.
வேலிபாய்தல் கேள்விகளுக்கு பதிலளித்து, பதிலளித்து சற்றும் சளைத்து களைத்திருந்த கெஹலிய, அதுக்கு....இங்க...அதுக்குனுனா? நீங்கதான் (ஆனந்த அளுத்கமகே) இரண்டு, மூன்று மணித்தியாலயங்கள் தயாராகவேண்டும். எனக்குன்னா அப்படியில்லிங்க, சொற்பநேரத்தில் மெட்டர முடிச்சிடுவேன். அவசரமாக இருந்துச்சி, வேலியை பாய்ந்துவிட்டேன் என்று பதிலளித்த இரண்டொரு நிமிடங்களில் அவருக்கான நேரமும் நிறைவடைந்துவிட்டதுங்கோ...
ஆண் விபசாரி, வேலிபாய்தல் மற்றும் விபசாரம் ஆகியன, இந்த வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் என்னமோ, கூடுதலாக கேட்கக்கூடியதாக இருக்கு, உங்க மணியாட்டி என்னமோ, மணியை ஆட்டிவிடாம அடக்கி அமுக்கி வாசிக்கிறாரு, அதாவது தேவையில்லாதவற்றை கட்பண்ணி, கட்பண்ணி எழுதுறாரு. எனினும் சபை நடவடிக்கைளை நேரலையாக காட்டுனா, கிஷ்ணகிரி கிளிஞ்சதுங்கோ.
இந்த விவாதத்தில், பிரதமர் ரணிலும் பதிலளித்து கொண்டிருந்தமையால், சபையே பகல்போஷனத்துக்கு முன்னமே கிளுகிளுப்பாக இருந்தது மட்டுமல்ல, சுவாரஷ்யமான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றதுங்கோ.
இந்த விவாதத்தில, முன்னரே உரையாற்றிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான, எக்டர் ஹப்புஹாமி, ராஜபகஷவின் ஆட்சிகாலத்தில், மஹிந்த ராஜபகஷ, பசில் ராஜபக்ஷ ஏன்? சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷவுக்கும் ஆகக்கூடுதலான நிதியானது வரவு-செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. ஏனையவர்கள் வாயை பார்த்துகொண்டிருந்தனர் என்று பொசுக்குன்னு கூறிவிட்டார்.
வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நேற்றுடன் எட்டுநாட்கள் விவாதம் நடந்துமுடிச்சிருச்சிங்கோ, அதுவரையிலும் எந்தவொரு வசனமுமே பேசாது இருந்த, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் என்றால், யாரு, இந்த சபாநாயகரையா? சொல்லுறிங்க, பெயர்களை சொல்லும்போதுங்க, கொஞ்சம் பொறுப்புடன் சொல்லவேண்டு என்று வினயமாகக் கேட்டுக்கொண்டார்.
கேள்விக்கேட்ட உறுப்பிரான ஹப்புஹாமியோ, பிரதிவாதஞ் செய்யாது அமைதியாகவே இருந்துவிட்டார். எனினும், பிரதமர் விடவே இல்லை, பெயரை குறிப்பிட்டு சொல்லியதற்காக நடவடிக்கை எடுக்கவேணுமுனா...மொதல்லுல வாசுதேவ எம்.பிக்கு எதிராகதான் எடுக்கவேண்டும். என்பெயரையே பலத்தடைவ கூறியிருக்காருங்கோ என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது, சபையில் கோஷா சத்தம் கேட்டக்கொண்டிருந்தது. சபையை கட்டுப்படுத்துவதற்கு சபாநாயகர் முயன்றுக்கொண்டிருந்தார். எனினும், சத்தம் காதை பிய்த்துகொண்டு சென்றது. எனினும், பதிலளிக்கவந்த பிரதமர், நானொன்றும் கூறவில்லை சபாநாயகர் அவர்களே! வயதான வெளவாலுக்கு வயகரா கிடைத்ததுக்கு நானென்ன செய்வதுனு கூறியமர்;ந்துவிட்டாரு.
அவ்வளவுதான் சபையில் இருபக்கங்களிலும் சிரிபொலியோ... சிரிபொலி... நேரமும் கடந்துபோக, பகல்போசணத்துக்காக சபை ஒத்திவைக்கப்பட்டதுங்கோ... ஒங்க மணியாட்டிக்கு என்ன? மணியடிச்சா சோறு மாமியாரு வீடுனு... கொட்டிக்கிட்டாருங்கோ!
மணியாட்டி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
4 hours ago