2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

சேலை வழங்கும் முதலமைச்சர்

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் முக்கியமான பகுதியின் முதலமைச்சர் ஒருவர் பெண்களுக்கு சேலைகளை விநியோகித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தலை நோக்காகக் கொண்டே இவ்வாறு செயற்படுவதாக ஒன்றிணைந்த எதிரணியினருக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

சேலைகளை வழங்கும்போது முதலில் தமக்கு நெருக்கமான மாதர் சங்கங்களை தெரிவு செய்துகொள்கிறாராம். அவர்களுக்கு விலையுயர்ந்த சேலைகளை கொடுத்து அசத்துகிறார் என்றால் பாருங்கள்.

அதற்கு அடுத்தபடியாக, தேர்தலில் இருபக்கங்களையும் சாராத அமைப்பினருக்கும் அவர் சேலைகளை பரிசாக வழங்கி வருகிறார். இது பற்றிக் கேள்வியுற்ற ஒன்றிணைந்த எதிரணியினர், அந்த முதலமைச்சர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

எனினும் காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தனது ‘இந்த’ நிகழ்ச்சித் திட்டம் குறித்து அறிவித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .