2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

செல்ஃபி மட்டுமே எஞ்சியது

Menaka Mookandi   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பெரியவரது அழைப்பின் ​பேரில், யானைக் கூட்டத்தின் தலைவர் உள்ளிட்ட குழு, பெரிய செயலகத்துக்கு, கூட்டமொன்றுக்காக வந்தது. கூட்டம் ஆரம்பிக்க முன்னர் ஒருவருக்கொருவர் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, வில்பத்து பக்கத்திலிருந்து சபைக்கு வந்த சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவரான முன்னாள் அமைச்சரொருவர், அற்புதமான கதையொன்றைச் சொன்னாராம்.

“இன்றும் எந்தப் பிரயோசனமும் இல்லை. இது சும்மா, பேச்சுக் கடை மாதிரித்தான். அதனால் நாம், பிரயோசனமான வேலையொன்றைச் செய்வோம்” என்று, அங்கிருந்த ஏனைய உறுப்பினர்களை, தான் இருந்த இடத்துக்கு அழைத்தாராம். “ஆ... சரி, எல்லோரும் இப்போது வரிசையில் நில்லுங்கள்...” என்று கூறிய அந்த முன்னாள் அமைச்சர், “கொஞ்சம் சிரியுங்கள்... ஸ்மைல் ப்ளீஸ்...” என்று சொன்ற அவர், உடனே தனது அலைபேசியை எடுத்து, செல்ஃபி எடுக்கத் தொடங்கினாராம். அந்தச் செல்ஃபிக்கு ஃபோஸ் கொடுக்க சிலர், “இது தான் உங்கள் பிரயோசனமான வேலையா?” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தார்களாம்.

இதற்கு பதிலளித்துள்ள அந்த முன்னாள் அமைச்சர், “நாம், எத்தனை நாட்கள் இந்த இடத்துக்கு, கூட்டங்களுக்காக வந்தோம். அவற்றால் ஏதும் பயன் கிட்டியதா? இல்லையே...இன்றும் அது தான் நடக்கும். அதனால் தான், சும்மா இருப்பதற்கு, செல்ஃபியாவது எடுப்போமென நான் யோசித்தேன்” என்று கூறினாராம். அத்துடன், “இன்றைய பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த செல்ஃபி மாத்திரம் தான் எமக்கு மிஞ்சப் போகிறது. அதனால், சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு, கொடுப்பதைச் சாப்பிட்டுக் குடித்துவிட்டுப் போவோம்” என்றும் அவர் கூறினாராம்.

இறுதியில், கூட்டம் முடிந்து அனைவரும் எழுந்து செல்லும்போது, முன்னாள் அமைச்சர் சொன்னதைப் போன்று, இறுதியில் செல்ஃபி மாத்திரம் தான் மிஞ்சியிருந்ததாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X