2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அவைக்குள் ஆண் விபசாரி

Kanagaraj   / 2016 நவம்பர் 18 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் எங்க உக்காந்து இருக்கிறேனு, ஒரே டவுட்டாதான் நேத்து இருந்தது உங்க மணியாட்டிக்கு. என்னா, உயரிய சபையில் என்னா என்னா நடக்கனும், என்னா என்ன பேசனுமுனே பலருக்கு தெரியபோங்க, விசயத்துக்கும் பேசுறதுக்கும் எந்தவிதமான சம்பந்தமே இருக்காது.

இன்னும் சிலரோ சொல்லவேண்டியத சுருக்கமா, நச்சுனு, வலிக்காம, மத்தவுங்க மனசு நெகிழுமாறு சொல்லிப்புடுவாங்க, சிறிதரன் எம்.பியும் அவ்வாறு மனத நெகிழ வைத்துவிட்டாரு. சிங்கள பொதுமகனுக்கும், தலைவர்களுக்கும் சிந்தனையில் மாற்றம் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்துவைத்துள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவியுங்கள், இறக்கச்சிந்தனையை காண்பியுங்கள், உங்கள் இதயங்களில் இருக்கும் ஈரமானப்பகுதிகளை தடவிப்பாருங்கள் என கேட்டுப்புட்டாரு.

பேச்சில் லயித்துபோயிருந்த உங்க மணியாட்டிக்கு என்னமோ, கை அங்க போயிட்டது. உடனடியாக, சிப்ப தொறந்தாரு, பெண்ரைவ எடுத்து, சிறிதரன் எம்.பியின் உரையடங்கிய வீடியோவ அப்படியே கொப்பி பண்ணி அனுப்பிட்டாரு.

அப்படியோ நேத்தும் சபைக்கு போனா, காலையிலிருந்து சபை நடவடிக்கைகள் மிகமிக சுமூகமாகவே நகர்ந்தது. சாப்பாட்டுக்கு பின்னர் தான் சூடுபிடித்தது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சிரித்த முகத்துடன் இருந்த ஒன்றிணைந்த எதிரணியினரின் முகம், வரவு-செலவுத்திட்டம் வாசித்து முடிக்கும் போது கறுத்துவிட்டது என்கையில்தான் அவையே கொந்தளிப்பானது.

எதிரணியிலிருந்து மஹிந்தானந்த ஏதோ கூறுவதற்கு முயல்கையில், உங்கள் முகமும் கறுத்துவிட்டது. ஏற்கெனவே கறுப்பான முகம், கறுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று கிண்டல் செய்துவிட்டால். கேளியும் கிண்டலுடனே அப்போது அதிகரித்தே இருந்ததுங்கோ.

அப்புறம் என்னா, அடுத்ததாக மஹிந்தானந்த அளுத்கமகே, பேச ஆரம்பித்தார். சுத்திமுத்தி எப்படியாவது வாயை அடைக்கும் அவர், தன் குரலை நேற்றும் உயர்த்தியே பேசினார்.

சுதந்தர இளைஞனே!  அழகானவரே வெள்ளைநிறத் தோலை கொண்டவரே, ம்...ம்... அவர்தான், இந்நாட்டின் கல்வியமைச்சர் என்று கூறுகையிலே அகில விராஜ், தன் ஆசனத்திலிருந்து எழுந்துகொண்டார்.

இது மஹிந்தானந்தவுக்கு இன்னும் வாய்ப்பாகவே போய்விட்டது. இப்ப எழுந்து இருக்காறே, அவர்தான்... அவர்தான்... தங்குமிடவிடுதியே இல்லாத பாடசாலைக்கு, நான்கு சமையற்காரர்களை நியமிப்பதற்கான அனுமதியை கொடுத்தவர் என கூறிவிட்டார்.

அக்கூற்றை முற்றாக மறுத்த அகில, இதுபொய்யென்றும், நான் குருநாகலில் இருந்தபோது, சைக்கிளில் நீலநிற ஜெக்கெட் அணிந்துகொண்டு, விற்பனை பிரதிநிதியாக வந்தவர்தான் இந்த மஹிந்தானந்த எனக்கூறிவிட்டார்.

இதனால், பொயின்ட் ஒப் ஓடர்... ஓடரென இரண்டொருவர் கேட்க, அவைக்கு தலைமைதாங்கிக் கொண்டிருந்த குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எவிரி டே யுவா சேயிங் நோ, பொயினட் ஒப் ஓடர் எனக்கூறிவிட்டார். அதனைப் பார்த்து அவையிலிருந்தோர் கெக்கென சிரித்துவிட்டனர்.

சிரிப்பு சிரிப்புடன் இருக்கட்டும் பேச்சு பேச்சாக்கத்தான் இருக்கும் என்றால்போல, நான் எனது உடலைவிக்கவில்லை. நான் ஆண் விபசாரியும் அல்ல, நான் விற்பதனை பிரதிநிதியாகவே வேலைச்செய்தேன், முகாமையாளராவும் இருந்தேன் அதிலென்ன பிரச்சினை எனக்கேட்டுவிட்டார்.

கேட்டு முடிக்கையிலேயே அவருடைய நேரமும் முடிவுக்கு வந்துகொண்டிருக்க, மத்திய வங்கியின் பிணைமுறி விவகார மோசடியில் முக்கிய புள்ளியான ரணில்விக்ரம சிங்க பிரதமரே, நாட்டின் பெரும் மோசடிக்காரர் என்றும் கூறிவிட்டார்.

அதன்போது, ஆளும் கட்சியின் எம்.பியான மரிக்கார், அளுத்கமகே எம்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பிரதமர் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை, ஹன்சாட்டிலிருந்து கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு அடுத்ததாக உரையாற்றிய அமைச்சர் சந்திராணி பண்டார, எதிர்வாதம் புரியாமல் அதிகாரம் இருக்கும் போது மூளை இல்லை, மூளை இருக்கும் போது, அதிகாரமில்லை என நாசுக்காக பதிலளித்தாருங்கோ.

இன்னும் சிலருக்கோ என்ன நடந்தாலும் நமக்கென்று இருப்பர். அப்படிதான், பிரதியமைச்சர்  ஹிஸ்புல்லா, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் தொர்பில உணர்ச்சிகரமாக பேசிக்கொண்ருந்த போது, அவருக்கு அருகே அமர்ந்திருந்த பிரதியமைச்சர் ஹரீஸ், அலிசாஹீர் மௌலான ஆகிய இருவரும் ஒருவரை யொருவர் புகைப்படம் எடுத்துகொண்டார்களுனா பாருங்களேன்.

-மணியாட்டி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X