2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

’’அடக்கி வாசியுங்கள்’’

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட “மார்ஷல்” அமைச்சரால் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன.

அவை, அவரது தனிப்பட்ட கருத்துகளேயன்றி அரசாங்கத்தின் கருத்து அல்ல என அறிவித்தபோதிலும் கூட அவர், மேலும் கருத்துகளை வெளியிட்டார்.

இதன்பின்னர் அரசாங்கத்தின் தலைமைகள் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன. கலந்துரையாடலின்போதே “மார்ஷலுக்கு” அழைப்பினை மேற்கொண்டு, தயவு செய்து அடக்கி வாசியுங்கள் எனக் கூறியிருக்கிறார்கள்.

"தேர்தல் நெருங்குவதால், உங்களுடைய கருத்துகள் எதிரணியினருக்கு சாதகமாக அமைந்துவிடும். நாட்டுக்கும் அபகீர்த்தியாகிவிடும். தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இது தருணமல்ல" எனச் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையான எச்சரிக்கையும் கூட!
(மூலம்: தேஷய)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .