Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளுக்கு பிள்ளைகளை, உங்கள் பிள்ளைகளென நினைத்தே பெற்றோர் அனுப்புகின்றனர். ஆக, மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அதிபர், ஆசிரியர்கள் அதிகூடிய சிரத்தையைக் காட்டவேண்டும்.
அப்படிதான், மலையகத்தில் வீதியோரத்தில் அமைந்திருக்கும் அந்தப் பாடசாலைக்கு மேம்பாலத்தை அமைப்பதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டு, அனுமதி பெறுவதற்கு அந்தா, இந்தாவென இருக்கிறதாம்.
பாடசாலையின் அதிபரோ, ஒரு கட்சிக்கு குஜாதூக்கி, ஜால்ரா அடிப்பவராம். மேம்பாலத்துக்கான யோசனையோ, திலகமிட்ட ராஜாவின் யோசனையாகும். ஜால்ராவுக்கு மாற்று அணியிலிருக்கும் அவரும் நாட்டில் இல்லையாம்.
அதிபரும் அவசர, அவசரமாக செயற்பட, சேவலும் இரவிலேயே கூவிவிட்டதாம். அப்புறமென்ன அப்பிரதேச, உள்ளூராட்சி மன்றத்துடன் இணைந்து, “பஸ் தரப்பிடத்தை திருத்துதல்” எனும் போர்வையில், மேம்பாலத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு பஸ் தரப்பிடத்தை அகலப்படுத்தி, விஸ்தரித்துவிட்டாராம்.
யோசனை யாருடையதாக இருந்தாலென்ன, மாணவர்களின் பாதுகாப்பில் கரிசனை காட்டவேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பாகுமென கடிந்துகொள்ளும் பெற்றோர், அதிபரின் செயலை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
மேம்பாலத்தை அமைத்தால், விமானங்கள் இறங்குவதற்கு தடையாக இருக்குமோ? அதனால்தான் இப்படி செய்துவிட்டார்களோ என அப்பிரதேச மக்கள் பேசுவதும் ஊர்க்குருவியின் காதுகளுக்கும் கேட்காமல் இல்லை.
கண்டி- பல்லேகல, திகன- மாபேரிதென்ன அங்கெல்லாம் விமான நிலையங்கள் அமைக்கப்படுமென பேசப்பட்டது. ஆட்சி மாறியிருக்காவிடின், கொட்டகலைக்கும் விமானம் நிலையம் வந்திருக்குமாம். ஐயோ… ஐயோ!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago