2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

யார் அந்த போதைப்பொருள் வியாபாரி?

Editorial   / 2018 பெப்ரவரி 09 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அமைச்சரொருவர், மலையகப் பகுதியொன்றில் வைத்து, காரசாரமான  உரையொன்றை ஆற்றினாராம். வாயாடி அமைச்சரான இவர், அவரது வாயாலேயே பல பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டவராவார்.

தேர்தலுக்கான நடந்த இந்தக் கூட்டத்துக்கு, கையின் தலைவரும் வந்திருந்தார். அவருக்கு முன்னால் பேசிய வாயாடி அமைச்சர், தோட்டப்புறங்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் அரசியல் தலைவரொருவரை, கடுமையாகத் தாக்கிப் பேசினாராம்.

இதன் பின்னர், பதவியை வைத்துக்கொண்டு போதைப்பொருள் விநியோகிப்பவர் யாரென்பது பற்றி, பலரும் விசாரிக்கத் தொடங்கினார்கள்.

போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு, போதைப்பொருள் விற்பவர் யாரென, மேடையில் அமர்ந்திருந்தவர்களும் முனுமுனுத்துக்கொண்டனராம்.

இதன்போது, தோட்டப்புறத்தைச் சேர்ந்த சிரேஷ்டர் ஒருவர், மேற்படி வாயாடி அமைச்சர் யாரைப்பற்றிச் சொன்னாரென்பதை, இரகசியமாக போட்டுடைத்துள்ளார். பார்க்கப்போனால், அந்த போதைப்பொருள் வியாபாரியும், அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒரே குடையில் நிழலை அனுபவிப்பவரென்று தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X