Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Editorial / 2021 நவம்பர் 17 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளரின் நினைவு வளாகத் திறப்புவிழாவும், மட்டு.இ.கி.மிசன் துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ எழுதிய சுவாமிகள் தொடர்பான இரு ஆய்வு நூல்கள் வெளியீட்டு விழாவும், கல்லடியிலுள்ள சுவாமியின் சமாதி அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் இன்று (17) நடைபெற்றன.
முன்னதாக பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் மறுசீரமைக்கப்பட்ட சமாதி, அதிதிகளால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டன. இ.கி.மிசன் சுவாமிகள் பஜனாவளியுடன் புஸ்பாஞ்சலி செலுத்தி, தீபாராதனை காட்டி ஆசிர்வதித்தனர்.
பின்பு வளாகத்திலுள்ள சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.
வரவேற்புரையுடன்கூடிய அறிமுகவுரையை துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ நிகழ்த்தினார்.
சிறப்புரைகளை, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமா மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் இந்து சமய கலாசார திணைக்களம் பதிப்பித்த சுவாமி நீலமாதவாநந்தா ஜீயின் இரு நூல்களை வெளியிட்டுவைத்து ஆசியுரையை நிகழ்த்தினார்.
விழாவில், கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவன பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி, காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, மட்டக்களப்பு விபுலாநந்த நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் க.பாஸ்கரன் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு சுவாமிகள் நூல் பிரதிகளை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
15 Apr 2025