2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு – களுதாவளை வட்டிக் குளக்கட்டு, அத்தியடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெரும்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனம் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை கிரியைகளுடன் ஆரம்பமானது.

இதனைமுன்னிட்டு, நாளை புதன்கிழமை எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வும் வியாழக்கிழமை(10)மஹா கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகப் பூசைகள் இடம்பெற்று எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும்  சங்காபிஷேகத்துடன் விழா நிறைவுபெறவுள்ளதாக களுதாவளை வட்டிக் குளக்கட்டு, அத்தியடி ஸ்ரீநாகதம்பிரான் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர். 

கிரியைகள் யாவும் பிரதிஷ்டா பிரமத குரு ஈசான தேசிகர் சோதிட கிகாமணி கிரியாயோதி சிவஸ்ரீ.வே.கு.நாகராசாக் குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்துகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .