2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

மருதடி வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழா ஆரம்பம்

Editorial   / 2023 மே 23 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி  அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழா    வியாழக்கிழமை (25) காலை 10.30 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  தொடர்ந்து 11 தினங்கள் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய  வேட்டைத்திருவிழா 31 ஆம் திகதி  புதன்கிழமை மாலை 4 மணிக்கும்  சப்பற  திருவிழா 1 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கும்  தேர்த்திருவிழா 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும்  தீர்த்தத்  திருவிழா 3 ஆம் திகதி சனிக்கிழமை  காலை 9 .30 மணிக்கும்  கொடியிறக்கம்  அதேநாள்  இரவு 7 மணிக்கும்  பிராயச் சித்த  அபிஷேகம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 9.30 மணிக்கும்  பூங்காவனம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கும்  வைரவர் பொங்கல் 5 ஆம் திகதி திங்கட்கிழமை  மாலை 5 மணிக்கும் இடம்பெறவுள்ளன.

ஆலய பிரதம குரு  பண்டிதர்,கலாநிதி சிவஸ்ரீ து.கு. ஜெகதீஸ்வரக்குருக்கள், மகோற்சவ குரு  கிரியாரத்தினா சிவாச்சாரியமணி,சிவஸ்ரீ ராம் .சண்முகானந்தக் குருக்கள் ,ஆலய குரு  பிரம்மஸ்ரீ சி. ஜெகதீஸ்வர  சர்மா , சாதகாசிரியர் வித்தியாசாகரம்  சிவஸ்ரீ  ஜெகதீஸ்வர மயூரக்குருக்கள் ஆகியோர் மகோற்சவ கிரியைகளை  நடத்துவார்கள்.

விழா சிறப்புற விளைவேலி மருதடி  அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான ஆதீனம் ,மாவை ஆதீனம்  மகாராஜஸ்ரீ    மாவை து.ஷ  ரத்தினசபாபதிக் குருக்கள் ஆசியுரை வழங்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X