2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மடுத்திருத்தல ஆடி மாத திருவிழா...

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா, இன்று சனிக்கிழமை (02) கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறை மாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, யாழ். மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இணைந்து இன்று காலை 6.15க்கு திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

இதன்போது வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் மற்றும் வவுனியா நீதிபதிகள், சட்டத்தரணிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மடு அன்னையின் ஆசியினைப் பெற்றனர்.  

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா, கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில் இன்று (02) காலை திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .