2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் மகா குப்பாபிஷேகம், இம்மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 10.30 மணிவரை நடைபெறவுள்ளது.

அதனையொட்டி அன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக கோயிலின் அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

மகோற்சவத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை 31ஆம் திகதி, மகா மிருத்யஞ்ஞ ஹோமமும் மூன்றாம் நாள் நவம்பர் ஞாயிற்றுக்கிழமை 01ஆம் திகதி, சுதர்ஷன ஹோமம் மற்றும் கலச அபிஷேகம் நான்காம் நாள் திங்கட்கிழமை 02ஆம் திகதி, நாகராஜப்பிரபுவுக்கு அபிஷேக ஆராதனையும் ஐயப்பனுக்கு அபிஷேகமும் நடைபெறும்.

ஐந்தாம் நாள் செவ்வாய்க்கிழமை 03ஆம் திகதி, ஐயப்பனுக்கு கலச அபிஷேகமும், திருவிளக்கு பூஜையுடனான லட்சார்ச்சனையும் தீபாரதனையும் நடைபெறும்.

ஆறாம் நாள் புதன்கிழமை 04ஆம் திகதி மஞ்சாமாதாவுக்கு விசேட அபிஷேகமும் ஐயப்பனுக்கு கலச அபிஷேகமும் நடைபெறும். 

ஏழாம் நாள் வியாழக்கிழமை 05ஆம் திகதி விசேட கலச அபிஷேகமும், எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை 06ஆம் திகதி கருப்பசாமி, கடுத்தசாமி விஷேட அபிஷேக ஆராதனையும் ஐயப்பனுக்கு கலச அபிஷேகமும் நடைபெறும்.

ஒன்பதாம் நாள் சனிக்கிழமை 07ஆம் திகதி, கலச அபிஷேகம் பஞ்ச புண்ணிய யாகம், பள்ளி வேட்டைத்திருவிழா, சுவாமி பள்ளியறைப் பூஜை ஆகியவை நடைபெறும்.

பத்தாம் நாள் மஹா கணபதி ஹோமம், சுவாமி திருப்பள்ளி எழுச்சி, கலச அபிஷேகம், தேரில சுவாமி வீதி உலா வந்து முகத்துவாரம் சங்கமத்தில் தீர்த்தவாரித் திருவிழாவும் கொடியிறக்கமும் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .