2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாதயாத்திரை

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

திருச்செபமாலை மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் பாதயாத்திரை நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இப் பாதயாத்திரை  புளியந்தீவு புனித மரியால் பேராலயம் வரை சென்றது.அதனைத்தொடர்ந்து அங்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் ஏற்பாட்டிலும் மரியாயின் சேனை இலங்கை மாதா கொமிசியத்தின் அனுசரணையுடனும் இந்த பாதயாத்திரை நடைபெற்றது.

மரியாயின் சேனை இலங்கை மாதா கொமிசியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜே.எஸ்.மொராயஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலி பூஜையில் தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் கலந்துகொண்டதுடன் மறை உரையினை அருட்தந்தை நோட்டன் ஜோன்சன் நிகழ்த்தினார்.

இதன்போது,இலங்கை மற்றும் உலகமெங்கும் அமைதி தோன்றவும் வன்முறைகள் நீங்கவும் நீடித்த சமாதானம் ஏற்படவும் மாதாவின் மகிமையை உலகம் உணர்ந்துகொள்ளவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

இந்த பாதயாத்திரையில் மரியாயின் சேனை இலங்கை மாதா கொமிசியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜே.எஸ்.மொராயஸ், மட்டக்களப்பு மறைக் கோட்டத்தின் தலைவி சகோதரி சரோஜா தம்பிப்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .