Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் - மன்னார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா செவ்வாய்க்கிழமை (08) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றப்பட்ட தினத்திலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா, பூஜைகள் இடம்பெறவுள்ளன. கொடியேற்ற நிகழ்வின் விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு வெங்கட சுந்தராம குருக்கள் நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆலய நிர்வாக தலைவர் கே.ஈ.செல்வராஜா, உப தலைவர் வீ. சண்முகவேல், செயலாளர் கோபிலன், பொருளாளர் ரகுநாதன், நிர்வாக உறுப்பினர் லோகநாதன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 16ஆம் திகதி ரத ஊர்வலமும் 17ஆம் திகதி கொடி இறக்கத்தோடு தீர்த்த உற்சவமும் இடம்பெற்று 18ஆம் திகதி இரவு ஸ்ரீ சித்தி விநாயகர் நகர் வலம் வரவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
41 minute ago
46 minute ago