Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Kogilavani / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை பார்க் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் சித்திரா பௌர்ணமி திருவிழா, கிரியாகால குரு கிரியா பூசனம் பிரம்மஸ்ரீ கோ.சிவபெருமாள் தலைமையில், நாளை மறுதினம் (24) காலை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைவாக நாளை மறுதினம் காலை 7.10 மணியளவில் கொடியேற்றமும் முகூர்த்தக்கால் நடப்பட்டு, காப்புக் கட்டுதலும் இடம்பெறும். மாலை 03 மணியளவில் தேயிலை மலை ஆற்றங்கரை அம்மன் திடலில், கரகம் பாலித்தல் இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8.15 மணியளவில், விநாயகர் வழிபாட்டுடன் பாற்குட பவனி, பறவைக்காவடி ஊர்வலம், அஸ்டோத்திர சத நாம (108) சங்காபிஷேகம் இடம்பெற்று, பகல் 12.30 மணிக்கு மகேஸ்வர பூசையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
திங்கட்கிழமை (26) காலை 09 மணிக்கு, சித்திரா பௌர்ணமி பூஜையம் பகல் ஒரு மணிமணிக்கு திருவிளக்குப் பூஜையும் இடம்பெற்று பின் வசந்த மண்டபப் பூஜையுடன் மாலை 4.20 மணியளவில் தேர்பவனி இடம்பெறவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (27) காலை, தேர் கோவிலை வந்தடைந்ததும் பச்சை சாத்துதல் இடம்பெற்று பிரயாசித்த பூசை, மாவிளக்குப் பூஜை, திரு ஊஞ்சல், பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளது.
புதன்கிழமை (28) காலை 9 மணிக்கு தீர்த்த உற்சவமும் அம்பாளுக்கு கஞ்சி படைக்கும் நிகழ்வும், கரக ஊர்வலம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் வருடாந்தத் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
27 minute ago
27 minute ago