Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை
Editorial / 2022 நவம்பர் 07 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
உலகிற்கு முதல் சைவசித்தாந்த நூலை தந்தவரும், நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அளித்த மூத்த சித்தரான திருமூலர் பெருமானின் குருபூஜையை முன்னிட்டு நடைபெறும் சண்டி ஹோமம், ஞாயிற்றுக்கிழமை (6) ஆரம்பமாகியது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் தலைமையில் மட்டக்களப்பு அமிர்தகழியில் ஞாயிற்றுக்கிழமை (6) ஆரம்பமாகிய சண்டி ஹோமம், செவ்வாய்க்கிழமை (8) நிறைவடையவுள்ளது.
இலங்கையின் இலங்கை பிரபல வேத வாத்தியார் சிவஸ்ரீ வத்சாங்க குருக்களின் தலைமையிலான வேத விற்பன்னர்கள் எண்மர் சண்டி ஹோமத்தை நடத்தி வருகின்றார்கள். அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள்.
ஹோமத்துக்கான திரவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டிருந்தன.
திங்கட்கிழமை (7)அதிகாலை 3 மணிக்கு அனைத்து கர்ம வினைகளையும் கழைந்து சிவபதமளிக்கும் ஏகாதச ருத்ர ஹோமம் இடம் பெற்று தொடர்ந்து காலை 8மணிக்கு பூர்ணாகுதி இடம் பெற்றது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி சங்கல்பத்தில் இருந்து யாகத்தில் பங்கேற்றார்.
யாகத்தில் சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் நமசிவாய மகேஸ்வரன் சுவாமி தியாகராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மாலையில் நமக்குள் இருக்கும் அபூர்வ ஆற்றலான குண்டலினி சக்தியை விழிக்க செய்து அனைத்து வித சித்திகளையும், ஆற்றல்களையும் கொடுக்கும் ஸ்ரீ சக்ர பூஜை, ஆதார சக்ர பூஜை, தேவி மகாத்மிய பாராயணம் இடம் பெற்றது.
செவ்வாய்க்கிழமை (8) அபூர்வமான ஐப்பசி பௌர்ணமி திதியில், அதிகாலை 3 மணிக்கு மாபெரும் சண்டி ஹோமம் ஆரம்பமாகும்.
தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் ஆதாரமாக இருக்கும் 13 சக்திகளுக்கும் யாகத்தில் சிறப்பு பூஜைகள், 64 உபசாரங்கள் இடம் பெற்று காலை 9 மணிக்கு பூர்ணாகுதி இடம் பெறுதலுடன் ஹோமம் நிறைவுக்கு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago