2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கொட்டாஞ்சேனையில் தாமோதர மாதம் அனுஷ்டிப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ இராதாகிருஷ்ண ஆலயத்தில், இம்மாதம் 17ஆம் திகதி புனிதம் மிகு தாமோதர மாத வழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

 நவம்பர் 15ஆம் திகதி வரை இந்த தாமோதர மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்தத் தாமோதர மாதத்தில் தினமும் மாலை 6 மணி முதல் விஷேட பூஜை, விளக்கேற்றல், கீர்த்தனை என்பனவும் அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல் என்பனவும் இடம்பெறும். 

பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்தத் தாமோதர விழா வருடாந்தம் கொண்டாடப்படுகிறது. 

தாம - என்றால் கயிறு. உதர - என்றால் வயிறு. அதுவே தாமோதர எனப்படுகிறது. பகவான் கிருஷ்ணர் காலிய என்னும் நாகத்தின் மீது நடனமாடியது, நரகாசுரனை வதம் செய்தது, கோவர்த்தன மலையை சுண்டு விரலால் தூக்கிக் குடையாகப் பிடித்தது போன்ற பல தெய்வீக லீலைகள் இம்மாதத்தில் தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் பக்தர்கள் வருகை தந்து வைபவத்தில் பங்குகொண்டு பகவான் திருவருளைப் பெற்றுய்யுமாறு, இராதாகிருஷ்ண ஆலயம் அழைப்பு விடுத்துள்ளது. (AN)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X