Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கபிலன்
அம்மன் பூப்பெய்திய தினமாக (ருது) ஆடிப்பூர நன்னாள் உலகவாழ் இந்துக்களினால் கொண்டாடப்படுகின்றது. இதனைச் சம்பிரதாயமாகக் கொண்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலும், காரைதீவு இந்து சமயவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், வெள்ளிக்கிழமை (05) ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது.
பெண்பிள்ளை வீட்டில் பூப்படைந்தாள் எவ்வாறான சம்பிரதாயங்கள் இந்துக்களின் வீடுகளில் நடைபெற்றதுவோ அதனையே இந்த ஆடிப்பூர விழாவின் போது அம்மன் ஆலயங்களில் பின்பற்றப்படும். அதே சம்பிரதாயங்களும் நடைபெற்றன.
அதனடிப்படையில், அம்மனை அழைத்துவந்து பச்சை ஓலையினால் செய்யப்பட்ட குடிலினுள் அமரச்செய்து, மாலை வேளையிலே மஞ்சள் நீராட்டல், அம்மனுக்கான விசேட அபிஷேகம், ஆராதனை, ஆராத்தி எடுத்தல் உட்பட பல கலாச்சார நிகழ்வுகளும நடைபெற்றது. இந்நாள் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
4 hours ago