2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இரதோற்சவமும் புனித தீர்த்த பவனியும்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வடக்கு ஏகத்துவ அமைப்பினரின் ஏற்பாட்டில், சுவர்ணயுகத்தின் அவதார புருஷரான ஸ்ரீ கல்கி பகவானின் 68ஆவது ஜென்மதின பெருவிழாவை முன்னிட்டு, இரதோற்சவமும் புனித தீர்த்த பவனியும் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி காலை 10 மணியளவில் முகத்துவாரம் நாவலர் மணிமண்டபத்தை வந்தடையவுள்ளது.

அதனைத் தொடரந்து ஸ்ரீ கல்கி பகவானுக்கு விசேட பூஜையும் ஆராதனையும் நடைபெறவுள்ளதுடன் பக்தர்களால் எடுத்துவரப்பட்ட 21 மூலிகைகளால் செய்யப்பட்ட புனித கல்கி தீர்த்தத்தினால் ஸ்ரீ பகவானின் திருபாதுகைகளுக்கு அபிஷேகமும் இடம்பெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் நேரம் தாழ்த்தாது குறிப்பிட்ட நேரத்தில் கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் முன்பாக சமுகமளிக்குமாறும் பூஜை நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மகேஸ்வர பூஜையிலும் (அன்னதானம்) கலந்துகொள்ளுமாறு கொழும்பு வடக்கு ஏகத்துவ அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 0779938776 அல்லது 0777882172 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .