2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சங்காபிஷேகம்

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக பூர்த்தி தின மகா சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு தற்புருச சிவாச்சாரியர் சிவஸ்ரீ கணேஷ சோதிநாதன் குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.

ஆலயத்தின் பரிபால தெய்வங்களுக்கு தனித்தானியாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மாபெரும் யாக நிகழ்வுகள் சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டன.

அத்துடன், ஆலயத்தின் முன்பகுதியில் பிரதான கும்பம் மற்றும் 1008 சங்குகள் கொண்ட மாபெரும் தசபக்ஸ சங்காபிஷேக பூஜைகள் நடாத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மூலமூர்த்திக்கு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டதுடன் பரிபால மூர்த்திகளுக்கும் அபிசேகம் செய்யப்பட்டு பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் அபிசேகம் செய்யப்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .