2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

திருவேட்டை திருவிழா

Sudharshini   / 2015 ஜூன் 29 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் திருவேட்டை திருவிழா (26) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழா, ஆலயத்திலிருந்து செந் நெல் விளை நிலத்தில் அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கிடாக் குளிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

திருவேட்டை திருவிழா, ஹனுமான் மற்றும் இராமர் போன்ற அவதாரங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை கொண்டு நடைபெற்றுவருகின்றது.

இந்து குருபீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள், மகோற்சவ குருவான ஷப்தரிஷி, ஆலய பிரதம குரு விஷ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் ஆகியோரின் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.

இலங்கா புரியின் ஆழிமழைக்கண்ணனுக்கு உன்னதமான அற்புத பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (19) கொடியேற்றதுடன் ஆரம்பமானது. எதிர்வரும் புதன்கிழமை (01) களுவண்கேனி இந்துமா சமுத்திர தீர்தோற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்படத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .