2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பரத் திருவிழா

Sudharshini   / 2015 ஜூன் 24 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் ஐந்தாம் நாளாகிய நேற்று செவ்வாக்கிழமை (23) சப்பரத் திருவிழா நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமானது.

மகோற்சவ குருவான சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் ஆகியோர் கிரியைகளை நடத்தினர்.

எதிர்வரும் புதன்கிழமை (01) தீர்தோற்சவத்துடன் வருடாந்த திருவிழா நிறைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .