Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 24 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கின் திருப்பதியாக விளங்கும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழாவின் ஐந்தாம் நாளாகிய நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரவு சப்பரத்தில், சுவாமி வெளி வீதி உலாவந்தார்.
வருடாந்தம் ஐந்தாம் திருவிழாவை நடாத்திவரும் கழுவத்தன்பனிக்குடி மக்களின் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
அன்றைய தினம் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமான ஐந்தாம் நாள் திருவிழாவானது மகா விஷ்ணுவுக்கு விசேட அபிசேக பூசையுடன் நண்பகல் வேளை சுவாமி ஆலய உள்வீதி வருகைதந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்பு இரவு நேர கொடித்தம்ப பூசைம ற்றும் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வருகைதந்து வெளிவீதியில் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்து வீதி உலாவருகைதந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சப்புர வீதி உலாவை தொடர்ந்து விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட நாட்டிய நடனங்களும் சுவாமியின் சப்பரத்துக்கு முன்பாக நடைபெற்று மக்களுக்கு கண்காட்சியை அழகுபடுத்தின.
இலங்கா புரியின் ஆழிமழைக்கண்ணனுக்கு உன்னதமான அற்புத பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மகோற்சவ குருவான ஷப்தரிஷி இந்துகுருபீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள் உட்பட ஆலய பிரதம குரு விஸ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் எதிர்வரும் புதன்கிழமை (01.07.2015) தீர்தோற்சவத்துடன் நிறைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
24 Apr 2025