Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 22 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வின் இறுதிநாள் திருவிழா கூட்டுதிருப்பலி, ஞாயிற்றுக்கிழமை (21) மாலை திருச்செபமாலை வழிபாட்டுடன் ஆரம்பமாகி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அடிகளார் ஏ. தேவதாசன் தலைமையில் இத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
திருவிழாவின் மூன்றாம் நவநாளாகிய சனிக்கிழமை புனிதரின் திருச்சொரூப பவனி கல்லடி பிரதான வீதி வழியாக இடம்பெற்று ஆலயத்தினை சென்றடைந்ததும் நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இறுதி நாளாகிய ஞாயிற்றுக்கிழமை பெருநாள் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் புனிதராம் அந்தோனியாரின் ஆசியுடன் திருவிழா நிறைவுபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago