2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முறக்கொட்டான்சேனை முத்துமாரி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம்

Thipaan   / 2015 ஜூன் 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹோற்ச பெருவிழாவின் ஆரம்ப நாளாகிய நேற்று (20) சனிக்கிழமை சுபவேளையில் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரதம சிவச்சாரியார் சபரிமலை குருஸ்வாமி, சபரீச கான வினோதன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவச்சாரியர் மற்றும் ஆலய பிரதம குரு சக்தி பூஜாதுரந்தரர் சிவஸ்ரீ உலகநாதபுஸ்பராஜக் குருக்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முத்தமாரி அம்மனின் கொடியேற்ற நிகழ்வானது சிவச்சாரியர்களின் மந்திரம் ஒலிக்க பக்தர்களின் அரோகரா சத்துடன் பக்தி தெய்வீகத்தன்மையுடன் கூடிய சுபவேளையில் நடைபெற்றதுடன் ஏனைய பூசைகளும் இடம்பெற்றது.

அம்மனின் மஹோற்வச திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் விசேட உற்சவ திருவிழாக்கள் அந்த அந்த விழா மக்களினால் நடைபெற இருக்கின்றது.

இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய அம்மனின் மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 01.07.2015 புதன்கிழமை நிறைவடையவுள்ளது.

அன்றைய தினம் பூரணை திதியிலே அதிகாலை 5 மணிக்கு  தீ மிதிப்புடன்  களுவன்கேணி இந்துமா சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெற்றதும் மகேஸ்வர பூசை மற்றும் கொடியிறக்கம், திருவூசஞ்சல் நிகழ்வுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .