2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

Sudharshini   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடிதம்பத்துக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடரந்து பத்து தினங்கள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளதுடன் தினமும் சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளது. தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜைகளும் நடைபெறவுள்ளன.

வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் புதன்கிழமை (24) தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது.

சோள இளவரசி சீர்பாததேவியினால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயமானது மிகவும் தொன்மைவாய்ந்ததெனவும் கருதப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .