2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்

Thipaan   / 2015 ஜூன் 15 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கிலங்கையின் தொன்மை மிகு ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று திங்கட்கிழமை(15) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மிகப்பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்ற கிரியைகள் இன்று காலை ஆரம்பமானது.

கிரியைகள் யாவும் மஹோற்சவ கால குரு சிவாகம கிரியா திலகம் சிவஸ்ரீ கருணாகர மகேஸ்வரக் குருக்களினால் நடாத்தப்பட்டது.

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமான மகோற்சவத்தில் அபிஷேகம் மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொச்சீலைக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு கொடிச்சீலை உள் வீதியுலா நடைபெற்றது.

கொடித்தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் நாத, வேத, அடியார்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்துக்காக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் பூஜையும் நடைபெற்ற அடியார்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .